Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோகமான்ய திலகரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை


லோகமான்ய திலகர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு புனேயில் லோக்மான்ய திலகரின் தேசிய விருதைப் பெற்ற நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய உரையையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

 

“லோகமான்ய திலகரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு உன்னதமான உயர்ந்த தலைவராக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். தேசியவாத உணர்வைத் தூண்டுவதற்காக அயராது உழைத்த அதே நேரத்தில், கல்வி, சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவர். கடந்த ஆண்டு புனேயில் லோகமான்ய திலகரின் தேசிய விருது பெறும் கவுரவம் எனக்கு கிடைத்த நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரையைப் பகிர்ந்து கொள்கிறேன்”.

 

***********

 

(Release ID: 2035486)

VL/PKV/RR/KR