குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் வாழ்க்கை பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
“குடியரசுத் தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நமது தேசத்திற்கான அவரது சிறப்பான சேவை மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும், முக்கியத்துவம் வாய்ந்த ஈடுபாடும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாகும். அவரது வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அவரது அயராத முயற்சிகள் மற்றும் தொலைநோக்கு தலைமைக்காக இந்தியா எப்போதும் அவருக்கு நன்றி செலுத்தும். அவர் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் ஆசீர்வதிக்கப்படுவாராக. @rashtrapatibhvn”
***
(Release ID: 2026870)
PKV/AG/RR
Warm birthday wishes to Rashtrapati Ji. Her exemplary service and dedication to our nation inspire us all. Her wisdom and emphasis on serving the poor and marginalised are a strong guiding force. Her life journey gives hope to crores of people. India will always be grateful to…
— Narendra Modi (@narendramodi) June 20, 2024