Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காசியில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்


காசியில் விவசாயிகள் நல நிதித் திட்டத்தில் நிதி விடுவித்தல், கங்கா ஆரத்தி மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, வாரணாசியில் டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகம் கட்டுவதற்கான பணிகள் குறித்து பிரதமர் மோடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“காசியில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தேன். இந்த மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் காசியின் இளைஞர்களுக்குப் பெரிதும் உதவும் .

***

(Release ID: 2026385)

AD/PLM/KPG/RR