Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்


இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி (ஐசிஇடி) திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் என்எஸ்ஏ சல்லிவன் விளக்கினார்

இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை புதிய பதவிக்காலத்தில் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) மேதகு திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில், குறிப்பாக செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், விண்வெளி போன்ற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சியின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து என்எஸ்ஏ சல்லிவன் பிரதமரிடம் விளக்கினார்.

அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பின் வேகம், அளவு மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு குறித்துப் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

அண்மையில் ஜி-7 உச்சிமாநாட்டில் அதிபர் பைடனுடன் தாம் நடத்திய நேர்மறையான கலந்துரையாடலைப்  பிரதமர் நினைவுகூர்ந்தார். உலகளாவிய நன்மைக்கு விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், புதிய பதவிக்காலத்தில் அதை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும்  உறுதிபூண்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

***

AD/SMB/DL