Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அர்த்த சக்ராசனம் குறித்த காணொலியை பிரதமர் பகிர்ந்துள்ளார்


அர்த்த சக்ராசனம் அல்லது அரைச் சக்கர நிலை குறித்த காணொலியை இன்று பகிர்ந்துகொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, சீரான இருதய செயல்பாடு மற்றும் மேம்பட்ட இரத்த ஓட்டத்திற்கு பொதுமக்கள் இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பகிரப்பட்ட இந்தக் காணொலியில், நின்ற நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்தின்  வழிமுறைகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“நல்ல ஆரோக்கியத்திற்கு சக்ராசனத்தைப் பயிற்சி செய்யுங்கள். இது இதயத்திற்கு நல்லது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.”

***

AD/RB/DL