Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசாவின் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

ஒடிசாவின் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு


ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு மோகன் சரண் மாஜிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திரு கனக் வர்தன் சிங் தேவ், திருமதி பிரவதி பரிதா ஆகியோருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஒடிசாவில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! ஒடிசாவின் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் ஆசீர்வாதத்துடன், பிஜேபி மாநிலத்தில் தனது முதல் அரசை அமைத்துள்ளது.

புவனேஸ்வரில் நடந்த பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொண்டேன். முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு மோகன் சரண் மாஜி, துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள திரு கனக் வர்தன் சிங் தேவ், திருமதி பிரவதி பரிதா ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள். அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மஹாபிரபு ஜெகந்நாத்தின் ஆசீர்வாதத்துடன், இந்தக் குழு ஒடிசாவில் சாதனை வளர்ச்சியைக் கொண்டுவருவதுடன் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்”.

(Release ID: 2024855)

PKV/KPG/RR