Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய கடற்படையால் பல்கேரியா கப்பல் மீட்கப்பட்டது குறித்த அந்நாட்டு அதிபரின் தகவலுக்குப் பிரதமர் பதில்


கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் “ருயென்” மற்றும் அதன் பணியாளர்கள் 7 பேரை இந்திய கடற்படை மீட்டது. இதுகுறித்து பல்கேரியா குடியரசின் அதிபர் திரு. ருமென் ராதேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

பல்கேரியா அதிபரான  உங்களது செய்தியைப் பாராட்டுகிறேன். 7 பல்கேரிய நாட்டினர் பாதுகாப்பாக இருப்பதிலும், அவர்கள் விரைவில் வீடு திரும்பவுள்ளது குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது’’.

*****

PKV/KV