புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசியப் படைப்பாளிகள் விருதை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் உரையாடினார். தேசிய படைப்பாளிகள் விருது என்பது கதை சொல்லல், சமூக மாற்ற ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி மற்றும் கேமிங் உள்ளிட்ட களங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாகும். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த நிகழ்ச்சி நடைபெறும் பாரத மண்டபம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் எதிர்காலத்திற்கு வழிகாட்டிய அதே இடத்தில் தேசிய படைப்பாளிகள் இன்று கூடியிருப்பதாகக் கூறினார்.
கால மாற்றம் மற்றும் புதிய சகாப்தத்தின் வருகைக்கு ஏற்ப அருகருகே நடந்து செல்வது நாட்டின் பொறுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இன்று முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகள் மூலம் நாடு அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகிறது என்று கூறினார். “தேசிய படைப்பாளர் விருதுகள் புதிய சகாப்தம் தொடங்குவதற்கு முன்பே அதற்கு அடையாளத்தை அளிக்கின்றன” என்று குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்தை முன்கூட்டியே பகுப்பாய்வு செய்யும் திறனை எடுத்துரைத்தார். தேசிய படைப்பாளர் விருதுகள் புதிய சகாப்தத்தை உற்சாகப்படுத்துவதன் மூலமும், இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களை மதிப்பதன் மூலமும் வரும் காலங்களில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்தில், தேசிய படைப்பாளர் விருதுகள் படைப்பாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மிகப்பெரிய ஆதாரமாக அமையும், அவர்களின் படைப்புகளுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். விருதுகளை வென்றவர்களை வாழ்த்திய பிரதமர், போட்டியாளர்கள் மிகக் குறுகிய காலத்தில் தீவிரமாகப் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். “இந்த நிகழ்ச்சிக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் சங்கம் தேசத்திற்கே ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது” என்று அவர் வலியுறுத்தினார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு முதலாவது தேசிய படைப்பாளர் விருதுகள் வழங்கப்படுவதைக் குறிப்பிட்ட பிரதமர், மொழி, கலை மற்றும் படைப்பாற்றலை உருவாக்கியவர் என்று சிவபெருமான் போற்றப்படுகிறார் என்றார். “நமது சிவன் நடராஜர் ஆவர். அவரது உடுக்க மகேஷ்வர் சூத்திரத்தை உருவாக்குகிறது, அவரது தாண்டவம் தாளம் மற்றும் படைப்புக்கு அடித்தளம் அமைக்கிறது” என்று கூறிய பிரதமர், மஹா சிவராத்திரியை முன்னிட்டு அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர், விருது பெற்ற பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் படைப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்கும் முடிவுவை அறிவித்து குறித்து கலந்து கொண்டவர்களிடமிருந்து பெரும் கைதட்டலை ஈர்த்தார்.
நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு திட்டம் அல்லது கொள்கையின் பன்மடங்கு தாக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் தகவல் புரட்சி மற்றும் குறைந்த செலவில் டேட்டா கிடைப்பது ஆகியவற்றைக் குறிப்பிட்டார். டிஜிட்டல் இந்தியா பிரச்சாரமே உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை உருவாக்கியதற்கு காரணம் என்று பாராட்டிய அவர், இந்தத் திசையில் இளைஞர்களின் முயற்சிகளையும் பாராட்டினார். “இளைஞர்கள் தங்களது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களை நோக்கி நகர வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்” என்று கூறிய பிரதமர், அவர்களை வாழ்த்தியதுடன், இதுபோன்ற விருதுகளைத் தொடங்கியதற்கு அவர்களையே பாராட்டினார்.
எந்தவொரு படைப்பாளியும் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தில் இதுவரை ஈடுபட்டதில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதமர், கல்வியிலிருந்து உள்ளடக்க உருவாக்கம் வரையிலான அவர்களின் பயணம் குறித்து கேட்டறிந்தார். “நீங்கள் உங்கள் சொந்தத் திட்டங்களின் எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர்” என்று பிரதமர் மோடி கூறினார். “நீங்கள் ஒரு யோசனையை உருவாக்கி, புதுமைப்படுத்தி, திரையில் அதற்கு உயிர் கொடுத்தீர்கள். நீங்கள் உங்கள் திறன்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உலகிற்கும் காட்டியுள்ளீர்கள்” என்று கூறிய பிரதமர், படைப்பாளர்களின் தைரியம் மற்றும் உறுதியைப் பாராட்டினார். இந்தியா முழுவதும் உள்ளடக்கத்தின் தாக்கத்தை ஒப்புக் கொண்ட அவர், “நீங்கள் இணையத்தின் எம்.வி.பி.க்கள்” என்று கூறினார்.
உள்ளடக்கம் மற்றும் படைப்பாற்றலின் ஒத்துழைப்பு ஈடுபாட்டை வளர்க்கிறது என்றும், உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்பு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றும், நோக்கத்துடன் உள்ளடக்கத்தின் ஒத்துழைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார். உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் உள்ளடக்கத்தின் மூலம் உத்வேகம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு மோடி, செங்கோட்டையில் இருந்து பெண்களுக்கு எதிரான அவமரியாதை பிரச்சினையை எழுப்பியதை நினைவு கூர்ந்தார். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் வளர்க்கும் போது பெற்றோர்களிடையே சமத்துவ உணர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உள்ளடக்க படைப்பாளிகள் சமூகத்துடன் இணைந்து இந்த மனப்பான்மையை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்வதற்கான அணுகுமுறையை அவர் வகுத்துள்ளார். இந்தியாவின் பெண் சக்தியின் திறன்களை வெளிப்படுத்துமாறு உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களை வலியுறுத்திய அவர், ஒரு தாய் தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்வது மற்றும் கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற யோசனைகளை வழங்கினார். “தவறான கருத்துக்களை சரிசெய்ய உள்ளடக்க உருவாக்கம் உதவும்” என்று பிரதமர் கூறினார்.
தூய்மை இந்தியா இயக்கம் என்பது முடிவில்லாத முயற்சி என்பதை கோடிட்டுக் காட்டிய பிரதமர், அண்மையில் ஒரு புலி பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்த காணொலியைக் குறிப்பிட்டு, இந்த திசையில் பாடத்தை உருவாக்குபவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குழந்தைகளிடையே மன ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தம் குறித்த தீவிரப் பிரச்சனைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும் அவர் பரிந்துரைத்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தாம் பார்த்த ஒரு குறும்படத்தையும் பிரதமர் பாராட்டினார். தேர்வுகளுக்கு முன்பாக குழந்தைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பைப் பெறும் தேர்வு குறித்த கலந்துரையாடல் திட்டத்தையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இளைஞர்கள் மீது போதைப்பொருளின் எதிர்மறையான விளைவுகளை முன்னிலைப்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்த திரு மோடி, “மருந்துகள் குளிர்ச்சியானவை அல்ல என்பதை நாம் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்து கவனத்தை ஈர்த்த பிரதமர், அடுத்த ஆண்டும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களைச் சந்திப்பதில் நம்பிக்கை தெரிவித்தார். இது மோடியின் உத்தரவாதம் அல்ல, 140 கோடி இந்திய குடிமக்களுக்கான உத்தரவாதம். தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் தோல்வியுற்றவர்களையும் அறிவிப்பதற்காக வாக்களிப்பது அல்ல, மாறாக இவ்வளவு பெரிய நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த இளைஞர்கள் மற்றும் நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல நாடுகள் பல்வேறு வழிகளில் செழிப்பாக மாறினாலும், அவை இறுதியில் ஜனநாயகத்தை தேர்ந்தெடுத்தன என்று அவர் குறிப்பிட்டார். “நூறு சதவீத ஜனநாயகம் குறித்து பெருமிதம் கொள்வதன் மூலம் வளர்ந்த நாடாக மாற இந்தியா உறுதி பூண்டுள்ளது” என்று பிரதமர் கூறினார். இந்தியாவை உலகிற்கு முன்மாதிரியாக மாற்றுவதில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் பங்களிப்பை அவர் முன்வைத்தார், மேலும் சமூக ஊடகங்களின் சக்தியுடன் இந்தியாவின் ஊனமுற்ற மக்களின் உள்ளார்ந்த வலிமையை வெளிக்கொணர வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உலகில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், உக்ரைனில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டபோது காணப்பட்ட மூவர்ணக் கொடியின் சக்தி குறித்து பேசினார். இந்தியாவை நோக்கிய உலகின் சூழலும், உணர்வும் மாறியிருந்தாலும், நாட்டின் தோற்றத்தை மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பிரதமர் மோடி தமது வெளிநாட்டு பயணத்தின் போது அழைக்கப்பட்ட நாட்டின் அரசுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியும் கணினிப் பொறியாளருடன் உரையாடியதை நினைவு கூர்ந்தார், அவர் இந்தியா பாம்பாட்டிகளின் பூமி மற்றும் மாந்திரீகர்களின் பூமி என்று கூறியதை சுட்டிக் காட்டினார். அந்த நாட்களில் இந்தியா மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தபோதிலும், இப்போது அதன் அதிகாரம் உலகின் திசையை வடிவமைக்கும் கணினி சுண்டெலியிடம் மையம் கொண்டுள்ளது என்று பிரதமர் விளக்கினார்.
“நீங்கள் உலகம் முழுவதும் இந்தியாவின் டிஜிட்டல் தூதர்கள். நீங்கள் உள்ளூர் குரலின் விளம்பரத் தூதர்கள்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். நேற்று ஸ்ரீநகருக்கு தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், டிஜிட்டல் இந்தியாவின் சக்தியின் மூலம் உலகளாவிய முத்திரையை உருவாக்கிய தேனீ வளர்ப்பு தொழிலதிபருடன் தாம் நடத்திய கலந்துரையாடலைக் குறிப்பிட்டார்.
வாருங்கள், இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தை நாம் தொடங்குவோம். இந்தியாவின் கதைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை முழு உலகத்துடனும் பகிர்ந்து கொள்வோம். இந்தியாவை உருவாக்குவோம், உலகை உருவாக்குவோம். படைப்பாளருக்கு மட்டுமல்லாமல், நாட்டிற்கும் அதிகபட்ச விருப்பங்களை உருவாக்கும் உள்ளடக்கத்தை உருவாக்க உலகளாவிய பார்வையாளர்களை ஈடுபடுத்துமாறு அவர் அவர்களை வலியுறுத்தினார். இந்தியா மீது உலக நாடுகள் கொண்டுள்ள ஆர்வத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் ஐநா மொழிகளான ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அவர்களின் பரவலை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பில் கேட்ஸுடன் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடியதை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறித்து தெரிவித்தார். இந்திய இளைஞர்கள் மற்றும் அவர்களின் திறமைகளைப் பாராட்டிய பிரதமர், செமிகண்டக்டர் இயக்கம் பற்றித் தொட்டு, 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டதைப் போன்று இந்தியாவும் முன்னெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உறவுகளை மேம்படுத்த அண்டை நாடுகளில் நிலவும் மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் தமது உரையை பல்வேறு மொழிகளில் குறுகிய காலத்தில் மொழிபெயர்க்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்தும், நமோ செயலியில் இருந்து புகைப்படங்களை கொள்முதல் செய்வது குறித்தும் பிரதமர் அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார்.
உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் திறன், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இந்தியாவின் முத்திரையை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். படைப்பாற்றலின் சக்தியை அவர் எடுத்துரைத்தார். அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான உதாரணத்தை வழங்கினார், அவை பார்வையாளரை அதே சகாப்தத்திற்கு அழைத்துச் சென்று அதை அனுபவிக்கும் திறன் கொண்டவை. தமது உரையை நிறைவு செய்த பிரதமர், இந்தியாவின் படைப்பாற்றல் அதன் வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக செயல்படுவதை அங்கீகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வாழ்த்திய அவர், குறுகிய காலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை பரிசீலித்த நடுவர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னணி
தேசிய படைப்பாளி விருது முன்மாதிரியான பொது ஈடுபாட்டைக் கண்டுள்ளது. முதல் சுற்றில், 20 வெவ்வேறு பிரிவுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு சுற்றில், பல்வேறு விருது பிரிவுகளில் டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மக்களின் தேர்வை இந்த விருது உண்மையிலேயே பிரதிபலிக்கிறது என்பதற்கு இந்த அபரிமிதமான பொது ஈடுபாடு சான்றாகும்.
சிறந்த கதைசொல்லிக்கான விருது உட்பட இருபது பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது; ஆண்டின் பிரபல படைப்பாளி; பசுமை சாம்பியன் விருது; சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி; மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி; ஆண்டின் கலாச்சார தூதர்; சர்வதேச படைப்பாளி விருது; சிறந்த பயண படைப்பாளி விருது; தூய்மை தூதர் விருது; நியூ இந்தியா சாம்பியன் விருது; டெக் கிரியேட்டர் விருது; ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது; மிகுந்த படைப்பாற்றல் கொண்ட படைப்பாளி (ஆண் & பெண்); உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளி; கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி; கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி; சிறந்த மைக்ரோ கிரியேட்டர்; சிறந்த நானோ படைப்பாளி; சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் ஆகிய பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டது
————–
KASI/RS/KV
The 'National Creators Award' recognises the talent of our creator's community. It celebrates their passion to use creativity for driving a positive change. https://t.co/Otn8xgz79Z
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
Digital India अभियान ने Content Creators की एक नई दुनिया create कर दी है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 8, 2024
क्या हम ऐसा Content और ज्यादा बना सकते हैं, जो Youth में Drugs के Negative Effects को लेकर Awareness लाए?
— PMO India (@PMOIndia) March 8, 2024
हम कह सकते हैं- Drugs is not cool for youth: PM @narendramodi
हम एक साथ मिलकर एक Create on India Movement की शुरुआत करें।
— PMO India (@PMOIndia) March 8, 2024
हम भारत से जुड़ी Stories को, भारत की संस्कृति को, भारत के Heritage और Traditions को पूरी दुनिया से शेयर करें।
हम भारत की अपनी Stories सबको सुनाएं।
Let us Create on India, Create for the World: PM @narendramodi