Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பழம்பெரும் தலைவரான பிஜு பட்நாயக்கின் தொலைநோக்குத் தலைமையும், வெல்ல முடியாத உணர்வும், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக திரு மோடி கூறினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பழம்பெரும் தலைவரான பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தொலைநோக்குத் தலைமையும், வெல்ல முடியாத உணர்வும், பல  தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. நமது நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பும், வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், முன்மாதிரியானவையாகும். இன்று, இந்தச் சிறப்பான நாளில், சண்டிகோலில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, ஒடிசா மக்கள் மத்தியில்  இருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். @BJP4Odisha பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளேன்.” 

***

PKV/BR/KV