Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தில் உள்ள ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் சுதர்சன சேது திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

குஜராத்தில் உள்ள ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் சுதர்சன சேது திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஓகா நிலப்பகுதியையும் பேட் துவாரகா தீவையும் இணைக்கும் சுதர்சன சேது திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் இதுவாகும்.

சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“ஓகா பிரதான நிலப்பகுதியையும் பேட் துவாரகா தீவையும் இணைக்கும் சுதர்சன் சேது சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் இதுவாகும்’’.

“பிரமிக்க வைக்கும் சுதர்சன் சேது!”

*******

ANU/PKV/SMB/DL