Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காசியில் ஷிவ்பூர்-புல்வாரியா – லஹர்தாரா மார்க்கத்தில் பிரதமர் ஆய்வு

காசியில் ஷிவ்பூர்-புல்வாரியா – லஹர்தாரா மார்க்கத்தில் பிரதமர் ஆய்வு


குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு வாரணாசி வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் ஷிவ்பூர் புல்வாரியா லஹர்தாரா மார்க்கத்தை ஆய்வு செய்வதற்காகச் சென்றார்.

இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தெற்குப் பகுதி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் போன்றவற்றைச் சுற்றியுள்ள சுமார் 5 லட்சம் மக்கள், விமான நிலையம், லக்னோ, ஆசம்கர் மற்றும் காசிப்பூர் நோக்கிச் செல்வதற்கு  இது பேருதவியாக இருக்கும்.

இந்த மார்க்கம் ரூ.360 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகிறது. இந்தத் திட்டம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து விமான நிலையம் நோக்கிய பயண தூரத்தை 75 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்களாகக் குறைக்கிறது. இதேபோல் லஹர்தாராவிலிருந்து கச்சாஹ்ரிக்கான தூரத்தை 30 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கிறது.

வாரணாசி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் ரயில்வே மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை இந்தத் திட்டம் எடுத்துரைக்கிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

காசியில் இறங்கியதும், ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தரா மார்க்கத்தை ஆய்வு செய்தேன்.  சமீபத்தில் தொடங்கப்பட்ட  இந்தத் திட்டம், நகரின் தெற்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

********

ANU/PKV/BR/KV