கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தோஹா சென்றடைந்தார். கத்தாருக்கு பிரதமர் மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும். அவர் முதல் முறையாக 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தாருக்குப் பயணம் மேற்கொண்டார்.
பிரதமரை கத்தார் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு சோல்தான் பின் சாத் அல்–முரைக்கி, விமான நிலையத்தில் வரவேற்றார்.
கத்தாரில் தமது இரண்டு நாள் பயணத்தின் போது, பிரதமர் கத்தார் பிரதமர் திரு ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வழங்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பிரதமர் கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்து இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
***
ANU/PKV/PLM/AG/KV
Landed in Doha. Looking forward to a fruitful Qatar visit which will deepen India-Qatar friendship. pic.twitter.com/h6QHKpqYcm
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
هبطت في الدوحة. إنني أتطلع إلى زيارة مثمرة إلى قطر من شأنها تعميق الصداقة بين الهند وقطر. pic.twitter.com/6wzjFPjrph
— Narendra Modi (@narendramodi) February 14, 2024