Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி ஐஐடி – அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்


தில்லி ஐஐடி-அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இது இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது மட்டுமின்றி, இரு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களையும் ஒன்றிணைக்கிறது என்று பிரதமர் கூறினார்.

இரு நாட்டு தலைவர்களின் நோக்கங்களின் அடிப்படையில் தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அபுதாபி வளாகம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி-டி), அபுதாபி கல்வி, அறிவுசார்த் துறை (ஏ.டி.இ.கே) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு ஒத்துழைப்புடன் இந்த திட்டம், உலகளவில் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்கால தலைமுறை தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டாண்மையை இது வளர்க்கும். முதலாவது கல்வித் திட்டமாக முதுகலை எரிசக்தி மாற்றம், நீடித்தத்தன்மை என்ற பாடப்பிரிவு  கடந்த ஜனவரி மாதம்  தொடங்கியது.

***

(Release ID: 2005699)  

ANU/SM/IR/RS/KRS