Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது: பிரதமர்


முன்னாள் பிரதமர் திரு பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

திரு நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவை, உலகச் சந்தைகளுக்குத் திறந்துவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய சிறப்பான நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“நமது முன்னாள் பிரதமர் திரு பி.வி.நரசிம்மராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நரசிம்ம ராவ் அவர்கள், ஒரு புகழ்பெற்ற அறிஞராகவும், ராஜீயவாதியாகவும், பல்வேறு பதவிகளில் இந்தியாவுக்கு நீண்டகாலமாகத் தொண்டாற்றியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகளாக அவர் செய்த பணிகளுக்காக அவர் நினைவுகூரப்படுகிறார். அவரது தொலைநோக்குத் தலைமை இந்தியாவைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு ஒரு கருவியாக இருந்தது. நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தது.

நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவை உலகளாவிய சந்தைகளுக்குத் திறந்து, பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். மேலும், முக்கியமான மாற்றங்கள் மூலம் இந்தியாவை வழிநடத்தியது மட்டுமின்றி, அதன் கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை வளப்படுத்திய ஒரு தலைவராக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவரது பங்களிப்புகள் அவரது பன்முக மரபை, வெளிப்படுத்துகின்றன.”

——-

(Release ID: 2004327)

ANU/SMB/PKV/KPG/RR