Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘சிறந்த உலக இசை’க்கான கிராமி விருதினை வென்றுள்ள உஸ்தாத் ஜாகீர் உசேனுக்கும் மற்றவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


உலக அளவில் சிறந்த இசைக்கான கிராமி விருதினை இன்று வென்றுள்ள இசைக் கலைஞர்கள் உஸ்தாத் ஜாகீர் உசேன், ராகேஷ் சௌராசியா, சங்கர் மகாதேவன்செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃப்யூஷன் இசைக் குழுவான சக்தி‘, ‘திஸ் மொமன்ட்என்ற ஆல்பத்திற்காக மதிப்புமிக்க இந்த விருதினை வென்றுள்ளது.

வர்களின் தனித்துவமான திறமை, இசைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை உலகெங்கிலும் உள்ள இதயங்களை வென்று இந்தியாவைப் பெருமைப்பட வைத்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

அற்புதமான கிராமி விருது வெற்றிக்காக ஜாகிர் ஹுசைன், ராகேஷ் சௌராசியா, சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் வி, கணேஷ் ராஜகோபாலன் ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்கள் அசாதாரண திறமை மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் இதயங்களை வென்றுள்ளது. இந்தியாவுக்குப் பெருமை! இந்தச் சாதனைகள் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். இது பெரிய கனவுகளைக் காணவும், இசையில் சிறந்து விளங்கவும் புதிய தலைமுறை கலைஞர்களை ஊக்குவிக்கும்”.

***

ANU/SMB/PKV/AG/KV