Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் சூர்யோதய திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய சக்தி அமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்: பிரதமர்


1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“உலகின் அனைத்து மக்களும் எப்போதும் சூர்யவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து சக்தியைப் பெறுகிறார்கள்.

அயோத்தியில் இன்று ராமர் ஆலய பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றுள்ள  புனிதத் தருணத்தில், நாட்டு மக்களின் வீடுகளின் மேற்கூரையில் சொந்த சூரிய சக்தி  அமைப்பை உருவாக்கித் தரும் தீர்மானம் மேலும் வலுவடைந்துள்ளது.

அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு என்னவென்றால், 1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “பிரதமரின் சூர்யோதயா யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்குவதாகும்.

 

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி, மின்சாரத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும்.”

***

(Release ID: 1998623)

ANU/SMB/PLM/AG/KRS