சூரியவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் பிரதிஷ்டை விழா நடைபெற்றுள்ள புனிதத் தருணத்தில் அயோத்திக்குப் பிரதமர் சென்று புதுதில்லி திரும்பியதைத் தொடர்ந்து, ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட “பிரதமரின் சூர்யோதயா யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்குவதற்கான கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கிலும், மின்சாரத் தேவைகளுக்குத் தற்சார்பு உடையவர்களாக அவர்களை மாற்றும் நோக்கிலும் சூரிய சக்தி மேற்கூரை அமைப்பை பயன்படுத்தலாம் என்று பிரதமர் கூறினார்.
பிரதமரின் சூர்யோதயா திட்டம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நபர்களுக்கு சூரியசக்தி மேற்கூரை அமைப்பதன் மூலம் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் உபரி மின்சார உற்பத்திக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
வீடுகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்பை அதிகம் நிறுவுவதை ஊக்குவிக்க ஒரு பெரிய தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
***
(Release ID: 1998634)
ANU/SMB/PLM/AG/KRS