பிரபல தமிழ்த் திரைப்பட ஆளுமையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
“தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது.”
Today, on his birth anniversary we remember and celebrate the life of the great MGR. He was a true icon of Tamil cinema and a visionary leader. His films, particularly those on social justice and empathy, won hearts beyond the silver screen. As a leader and Chief Minister, he…
— Narendra Modi (@narendramodi) January 17, 2024