Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் தரிசித்துப் பூஜை செய்தார்

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் தரிசித்துப் பூஜை செய்தார்


ஆந்திர மாநிலம்புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை செய்து வழிபட்டார். தெலுங்கில் ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களைக் கேட்ட திரு மோடிதோலு பொம்மலாட்டா என்று அழைக்கப்படும் ஆந்திராவின் பாரம்பரிய நிழல் பொம்மலாட்ட கலை வடிவத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட ஜடாயுவின் கதையைக் கண்டு மகிழ்ந்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பிரபு ஸ்ரீ ராமரின் பக்தர்களான அனைவருக்கும்லெபாக்ஷி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றுவீரபத்ரர் கோவிலில் பிரார்த்தனை செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்திய மக்கள் மகிழ்ச்சியாகவும்ஆரோக்கியமாகவும்செழிப்பின் புதிய உயரங்களைத் தொடவும் நான் பிரார்த்தனை செய்தேன்.”

“லெபாக்ஷி வீரபத்ரர் கோயிலில்ரங்கநாத ராமாயணத்தைக் கேட்டேன்ராமாயணத்தின் பொம்மலாட்ட நிகழ்ச்சியையும் பார்த்தேன்.”

—-

(Release Id  1996705)

ANU/SM/IR/KPG/KRS