Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐஎன்எஸ் இம்பால் கடற்படையில் இணைக்கப்பட்டது, இந்தியாவுக்கு பெருமையான தருணம்: பிரதமர்


ஐஎன்எஸ் இம்பால் இன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னிறைவைப் பாராட்டி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“ஐஎன்எஸ் இம்பால் நமது கடற்படையில் இணைக்கப்பட்டது, இந்தியாவுக்குப் பெருமையான தருணம். இது பாதுகாப்புத் துறையில்  இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னிறைவுக்குச் சான்றாகும். நமது கடற்படையின் சிறப்பையும், பொறியியல் திறமையையும் இது பறைசாற்றுகிறது. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள். நமது கடல்களைப் பாதுகாத்து, நமது தேசத்தை வலுப்படுத்திக் கொண்டே இருப்போம்.”

***

(Release ID: 1990618)

ANU/SMB/PKV/RR