கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளை மக்கள் நினைவுகூர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! இந்தப் பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் வழங்கட்டும். கிறிஸ்துமஸ் அடையாளப்படுத்தும் நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வைக் கொண்டாடுவதுடன், அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் உலகத்திற்காகப் பாடுபடுவோம். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னதமான போதனைகளையும் நாம் நினைவுகூர்கிறோம்.”
******
ANU/SMB/BR/KPG
Wishing everyone a Merry Christmas! May this festive season bring joy, peace and prosperity to all. Let’s celebrate the spirit of harmony and compassion that Christmas symbolizes, and work towards a world where everyone is happy and healthy. We also recall the noble teachings of…
— Narendra Modi (@narendramodi) December 25, 2023