Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கும் பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மக்ரோனை வரவேற்க பிரதமர் ஆவலுடன் உள்ளார்


75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக்  கலந்துகொள்ளவிருக்கும் பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மக்ரோனை வரவேற்க பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆவலுடன் உள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அதிபர் திரு இமானுவேல் மக்ரோன் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:

“எனது அன்பு நண்பர் அதிபர் திரு  மக்ரோன் அவர்களே, 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக உங்களை வரவேற்க  நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்திய- பிரான்ஸ் கேந்திர கூட்டாண்மை மற்றும் ஜனநாயக மாண்புகள் மீதான பகிரப்பட்ட நம்பிக்கையையும் நாம் கொண்டாடுவோம். விரைவில் சந்திப்போம்!”

*******

ANU/PKV/RB/DL