Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்று பங்கேற்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 19 அன்று கலந்துரையாடுகிறார்


ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்றில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023, 19 டிசம்பர் அன்று இரவு 9:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்பஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  என்பது அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள்தொழில்துறைகள் மற்றும் பிற அமைப்புகளின் நெருக்கடியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நாடு தழுவிய முன்முயற்சியாகும். 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளதுகடந்த ஐந்து நிகழ்வுகளில்பல புதுமையான தீர்வுகள் வெவ்வேறு களங்களில் வெளிவந்துள்ளன மற்றும் நிறுவப்பட்ட புத்தொழிலில் நிறுவனங்களாக தனித்து நிற்கின்றன.

 

இந்த ஆண்டுஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்று டிசம்பர் 19 முதல் 23 வரை நடைபெறுகிறதுஇதற்காக 44,000 குழுக்களிடமிருந்து 50,000-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டன. இது முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்றுடன் ஒப்பிடும்போது சுமார் ஏழு மடங்கு அதிகமாகும். நாடு முழுவதும் 48 மையங்களில் நடைபெறும் இந்த இறுதிச் சுற்றில் 12,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட வழிகாட்டிகள் பங்கேற்க உள்ளனர்விண்வெளி தொழில்நுட்பம்ஸ்மார்ட் கல்விபேரிடர் மேலாண்மைரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன்கள்பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தீர்வுகளை வழங்குவதற்காக இந்த ஆண்டு இறுதிச் சுற்றுக்கு மொத்தம் 1,282 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பங்கேற்கும் குழுக்கள் 25 மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளின் 51 துறைகளால் வெளியிடப்பட்ட 231 (176 மென்பொருள் மற்றும் 55 வன்பொருள்சிக்கல் மிகுந்த அறிக்கைகளை எதிர்கொண்டு தீர்வுகளை வழங்கும். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 க்கான மொத்த பரிசு 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இதில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சிக்கல் மிகுந்த அறிக்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

—–

(Release ID: 1987872)

 ANU/SM/IR/KPG/KRS