Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் மூலம் சூரத் விமான நிலையம் சர்வதேச பயணிகளுக்கான நுழைவாயிலாக மாறுவது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் வைரம் மற்றும் ஜவுளி – தொழில்களுக்கான தடையற்ற ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகளுக்கு உதவும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஆற்றலை வலுப்படுத்த உதவும். சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது ஒரு அந்த பிராந்தியத்தின் செழிப்பை ஊக்குவிக்கும்.

வேகமாக வளர்ந்து வரும் நகரமான சூரத் குறிப்பிடத்தக்க பொருளாதார வலிமையையும் தொழில்துறை வளர்ச்சியையும் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சூரத் விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது மிக முக்கியமானது. இது பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு நடவடிக்கைகளை அதிகரிப்பதுடன், பிராந்திய வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான உத்வேகத்தை வழங்கும்.

*******

ANU/PKV/PLM/DL