Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமோ செயலியில் உள்ள நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைக்கான தூதர் பிரிவில் பயனுள்ள செயல் திட்டப் பணிகளைச் செய்வதற்கான 100 நாள் சவாலை ஏற்குமாறு மக்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்


நமோ செயலியில் உள்ள நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைக்கான தூதர் (விக்சித் பாரத் அம்பாசிடர்) பிரிவில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் திட்டப் பணிகளைச் செய்வதற்கான 100 நாள் சவாலை ஏற்று செயல்படுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான தூதராக இருந்து சக்தியை ஒருங்கிணைத்து, வளர்ச்சித் தகவல்களைப் பரப்பி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது நோக்கத்தை நிறைவேற்ற நமது ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“140 கோடி இந்தியர்களும் மக்கள் சார்ந்த வளர்ச்சி என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியுள்ளனர்.

வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கான கூட்டு முயற்சிகளில் நாம் ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்த பங்களிப்பாளர்களாக இருக்கிறோம்.

https://www.narendramodi.in/ViksitBharatAmbassador

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தூதராக இருப்பது நமது பலங்களை ஒருங்கிணைக்கவும், வளர்ச்சித் தகவல்களைப் பரப்பவும், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான நோக்கத்தை நிறைவேற்ற நமது ஆற்றலைப் பயன்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.

நமோ செயலியில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் தூதர் பிரிவில் (விக்சித் பாரத் அம்பாசிடர்) எளிமையான ஆனால் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளைச் செய்வதற்கான 100 நாள் சவாலை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த மக்கள் இயக்கத்தில் இணைவோம்.

வாழ்க்கையின் அனைத்துத் தரப்பில் இருந்தும் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் சிறந்த தூதர்களில் சிலரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நான் ஆவலாக உள்ளேன்.

*******

ANU/SMB/PLM/KV