Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற  சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார்.

புதிதாக அதிபராக அண்மையில் பதவியேற்றுள்ள முயிஸூவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த இருதரப்பு உறவுகள், மக்கள் தொடர்பு, வளர்ச்சி, பொருளாதார உறவுகள், பருவநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இரு தலைவர்களும் தங்கள் கூட்டு செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக, ஒரு குழுவை அமைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

******

ANU/AD/PLM/DL