Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுர்வேதத்தை ஆதரிப்பது உள்ளூருக்கு குரல் கொடுப்பதற்கு ஒரு துடிப்பான எடுத்துக்காட்டு: பிரதமர்


ஆயுர்வேதத்தை ஆதரிப்பது உள்ளூருக்கு குரல் கொடுப்பதற்கு ஒரு துடிப்பான எடுத்துக்காட்டு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த பண்டைய அறிவை நவீனத்துவத்துடன் கலந்து, ஆயுர்வேதத்தை உலகளவில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களை திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“தந்தேராஸ் எனும் புனித நாளில், நாம் ஆயுர்வேத தினத்தையும் கொண்டாடுகிறோம். இந்த பண்டைய அறிவை நவீனத்துவத்துடன் கலந்து, ஆயுர்வேதத்தை உலகளவில் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது. அற்புதமான ஆராய்ச்சி முதல் பன்முக ஸ்டார்ட்அப்கள் வரை, ஆயுர்வேதம் ஆரோக்கியத்திற்கான புதிய பாதைகளை முன்னெடுத்து வருகிறது. ஆயுர்வேதத்தை ஆதரிப்பது உள்ளூருக்கு குரல் கொடுப்பதற்கான ஒரு துடிப்பான எடுத்துக்காட்டு.

===========

ANU/SM/BS/RS/KRS

(Release ID: 1976239)