Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் கட்டமைப்பில் கோழிக்கோட்டை ‘இலக்கிய நகரம்’ என்றும், குவாலியரை ‘இசை நகரம்’ என்றும் சேர்த்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி


யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் கட்டமைப்பில் கோழிக்கோடுஇலக்கிய நகரம்என்றும், குவாலியர்இசை நகரம்என்றும் சேர்க்கப்பட்டதற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்காக கோழிக்கோடு மற்றும் குவாலியர் மக்களுக்கு திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

கோழிக்கோட்டின் வளமான இலக்கிய பாரம்பரியத்துடன்  இந்தியாவின் கலாச்சார உயிர்ப்பு உலக அரங்கில் பிரகாசமாக ஜொலிக்கிறது என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிஇசைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மற்றும் செழுமைப்படுத்துவதில் குவாலியரின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். இது உலகம் முழுவதும் எதிரொலிப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டியின் பதிவுகளை மேற்கோள் காட்டி, பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

 

கோழிக்கோட்டின் வளமான இலக்கியப் பாரம்பரியம் மற்றும் குவாலியரின் இனிமையான இசைப் பாரம்பரியம் இப்போது மதிப்புமிக்க யுனெஸ்கோ படைப்பாற்றல் நகரங்கள் கட்டமைப்பில் இணைவதன் மூலம் இந்தியாவின் கலாச்சார உயிர்ப்பு உலக அரங்கில் சிறப்பாகப் பிரகாசிக்கிறது.

 

 

இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக கோழிக்கோடு மற்றும் குவாலியர் மக்களுக்கு வாழ்த்துகள்!

 

இந்த சர்வதேச அங்கீகாரத்தை நாம் கொண்டாடும் வேளையில், நமது மாறுபட்ட கலாச்சார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நமது தேசம் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

 

இந்த அங்கீகாரம் நமது தனித்துவமான கலாச்சாரங்களை வளர்ப்பதற்கும் பகிர்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஒவ்வொரு தனிநபரின் கூட்டு முயற்சிகளையும் எடுத்துக் காட்டுகிறது.”

 

Release ID: (1973819)

PKV/PLM/KRS