Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கன்னட ராஜ்யோத்சவத்திற்குப் பிரதமர் வாழ்த்து


கன்னட ராஜ்யோத்சவம் எனப்படும் கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

இந்த கன்னட ராஜ்யோத்சவத்தில், பழங்கால கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில் முயற்சிகளின் தொட்டிலாகத் திகழும் கர்நாடகாவின் உணர்வை நாம் கொண்டாடுகிறோம். அரவணைப்பும் ஞானமும் கலந்த அதன் மக்கள், மாநிலத்தின் மேன்மையை நோக்கிய இடைவிடாத பயணத்திற்கு ஊக்க சக்தியாக இருக்கின்றனர். கர்நாடகா தொடர்ந்து செழிக்கட்டும், புதுமைகளைப் புகுத்தட்டும், அனைவருக்கும் ஊக்கமளிக்கட்டும்.”

—-

ANU/PKV/PLM/KPG