Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சதுரங்கத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கிஷன் கங்கோலிக்கு பிரதமர் வாழ்த்து


ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான சதுரங்கப் போட்டியின் பி2 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கிஷன் கங்கோலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் சதுரங்க பி2 பிரிவில் (தனிநபர்) வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கிஷன் கங்கோலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அவரது சிறந்த உணர்வும், அசைக்க முடியாத உறுதியும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.”

***

 

Release ID: 1972662