Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற நிதேஷ் குமார், தருண் தில்லான் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் எஸ்.எல்.3-எஸ்.எல்.4 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிதேஷ் குமார், தருண் தில்லான் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர்களின் அணி செயல்பாட்டைப் பாராட்டிய அவர், இது வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பிரகாசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பேட்மிண்டன் – ஆடவர் இரட்டையர் எஸ்.எல் 3-எஸ்.எல் 4 இல் அற்புதமான தங்கப் பதக்கம் வென்ற நிதேஷ் குமார், தருண் தில்லான் ஆகியோருக்கு வாழ்த்துகள்.  அவர்களின் அணி செயல்பாடு மற்றும் திறமை வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்குப் பிரகாசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அவர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.”      

***

ANU/PKV/SMB/DL