ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபர் தரம் 6-பி 1 ஆர்என்டி7 சதுரங்கப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷி ரதிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் தனிநபர் தரநிலை 6-பி 1 ஆர்.என்.டி.7- செஸ் போட்டியில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய ஹிமான்ஷி ரதிக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பு மற்றும் உத்திபூர்வ திறமை அவருக்கு நன்கு தகுதியான வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது. வரும் காலங்களில் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெறட்டும்.“
***
ANU/PKV/SMB/AG/KPG
Congratulations to Himanshi Rathi for the stellar performance in Chess Women's Individual Standard VI-B1 RND7 at the Asian Para Games. Her dedication and strategic prowess have earned her a well-deserved Bronze Medal. May she continue to scale more success in the times to comes. pic.twitter.com/cqRzdoR3A5
— Narendra Modi (@narendramodi) October 26, 2023