சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பாரா பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துகள்.
அவரது அசைக்க முடியாத உறுதியும், சிறப்பான திறமையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது”.
***
ANU/SMB/IR/RS/KPG
Congratulations to Para Shuttler @07nithyasre on winning the Bronze Medal in Para Badminton Women's Singles SH6 event.
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
Her unwavering determination and exceptional skill are an inspiration to us all. pic.twitter.com/IF6TV5Bv6A