2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 72 பதக்கங்களை வென்ற இந்தியா தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அந்த சாதனையை முறியடித்து 73 பதக்கங்களை வென்றுள்ளதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பாரா தடகள வீரர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத செயல்பாட்டினை திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் 73 பதக்கங்களை வென்று இன்னும் வலுவாக உள்ளது, ஜகார்த்தா 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 72 பதக்கங்கள் என்ற நமது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது!
இந்த முக்கியமான சந்தர்ப்பம் நமது விளையாட்டு வீரர்களின் தளராத உறுதியைப் பிரதிபலிக்கிறது.
வரலாற்றில் தங்கள் பெயர்களைப் பதித்து, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திய நமது தனித்துவமான பாரா தடகள வீரர்களுக்கு ஒரு ஆரவாரமான பாராட்டு.
அவர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி சிறந்து விளங்குவதற்கான அசைக்க முடியாத செயல்பாடு ஆகியவை உண்மையிலேயே உத்வேகம் அளிக்கின்றன!
இந்த மைல்கல் சாதனை எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும், உத்வேகமாகவும் அமையட்டும்.”
***
ANU/SMB/IR/RS/KPG
A monumental achievement at the Asian Para Games, with India bagging an unprecedented 73 medals and still going strong, breaking our previous record of 72 medals from Jakarta 2018 Asian Para Games!
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
This momentous occasion embodies the unyielding determination of our athletes.… pic.twitter.com/wfpm2jDSdE