Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குர்ஜாரின் செயல்திறன் அபாரமானது என்று பாராட்டியுள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சுந்தர் குர்ஜாருக்கு @SundarSGurjar வாழ்த்துகள். இது அபாரமான சாதனையாகும். அவரது முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

***

ANU/SMB/PKV/KPG