Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.டி.பி.பி.யின் நிறுவன தினத்தில் அதன் அசைக்க முடியாத உத்வேகம் மற்றும் வீரத்திற்கு பிரதமர் மரியாதை


ஐ.டி.பி.பி. எனப்படும்  இந்தோ-திபேத் எல்லைக் காவல் படை நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐடிபிபி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஐ.டி.பி.பி நிறுவன  தினத்தை முன்னிட்டு, நமது ஐ.டி.பி.பி வீரர்களின் அசைக்க முடியாத உணர்வையும் வீரத்தையும் நான் வணங்குகிறேன். நமது தேசத்தைப் பாதுகாப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில், இயற்கை பேரழிவுகளின் போது அவர்களின் பாராட்டத்தக்க மனிதாபிமான முயற்சிகள் தேசத்தின் மீதான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும். அதே அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் அவர்கள் தொடர்ந்து சேவை செய்யட்டும்”

***

ANU/PKV/DL