Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் பேச்சு


பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பேசினார், இருவரும் மேற்காசிய பிராந்தியத்தின் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்த பகிரப்பட்ட கவலைகளையும் திரு மோடி வெளிப்படுத்தினார், மேலும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமையை விரைவாக தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார் .

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியுள்ளதாவது:

 

“ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பேசினேன். மேற்காசிய பிராந்தியத்தின் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டேன். பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு குறித்த கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமையை விரைவாக தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளின் தேவையை எடுத்துரைத்தேன்.

(Release ID: 1970216)

ANU/AD/KRS