Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையின் ஈ.என்.டி துறையால் கடந்த 18 மாதங்களில் காதின் இரு பகுதிகளிலும் காக்ளியர் சாதனங்களை ஒரே சமயத்தில் பொருத்தும் 50 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்


தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ஈ.என்.டி) துறையால் கடந்த 18 மாதங்களில்  காதின் இரு பகுதிகளிலும்  காக்ளியர் சாதனங்களை ஒரே சமயத்தில் பொருத்தும் 50  அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகத்தின்  சமூக ஊடக எக்ஸ் பதிவை மேற்கோள் காட்டி  பிரதமர் கூறியிருப்பதாவது:

 

காக்ளியர் சாதனை அறுவைச் சிகிச்சையில் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுக்கள். இத்தகைய அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் பலருக்குப் பிரகாசமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. இந்த சாதனை நமது மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.”

————

SMB/ANU/IR/RS/KV