Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை பாருல் சௌத்ரிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் பாருல் சௌத்ரிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது செயலைப் பாராட்டிய பிரதமர், இது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகும் என்று கூறி, எதிர்காலத்தில் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;:

மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற பாருல் சௌத்ரியை நினைத்துப் பெருமை அடைகிறேன்.

அவரது செயல் உண்மையிலேயே ஊக்கத்தைத் தூண்டும் வகையில் இருந்தது. அவர் தொடர்ந்து முன்னேறி, வெற்றியை நோக்கிப் பயணிக்கட்டும்.

***

 

ANU/SRI/SMB/AG/KPG