Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கேனோ (படகு) இரட்டையர் 1000 மீட்டர் பிரிவில் அர்ஜூன் சிங், சுனில் சிங் சலாம் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்


ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கேனோ (படகு) இரட்டையர் 1000 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜூன் சிங், சுனில் சிங் சலாம் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கேனோ (படகு)  இரட்டையர் 1000 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜூன் சிங், சுனில் சிங் சலாம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

அவர்கள் தங்கள் அற்புதமான செயல்திறன் மற்றும் உறுதியால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். மில்லியன் கணக்கான இளம் இந்தியர்கள் தங்கள் கனவுகளைத் தொடரவும், விளையாட்டில் சிறந்து விளங்கவும் அவர்கள் உத்வேகம் அளித்துள்ளனர்.

 

 

***

AD/ANU/IR/RS/KPG