Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவுவதன் மூலம், நமது மஞ்சள் விவசாயிகளின் ஆற்றலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்: பிரதமர்


விவசாயிகளின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

பிரதமர் நேற்று அறிவித்த தேசிய மஞ்சள் வாரியத்தை அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த நிஜாமாபாத் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அரவிந்த் தருமபுரியின் பதிவிற்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“நம் விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் வளம் ஆகியவை எப்போதும் நமது முன்னுரிமையாக உள்ளன.

தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவுவதன் மூலம், நமது மஞ்சள் விவசாயிகளின் திறனைப் பயன்படுத்துவதையும், அவர்களுக்கு சரியான ஆதரவை வழங்குவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

குறிப்பாக, நிஜாமாபாத் அபரிமிதமான பலன்களைப் பெறும் மஞ்சள் விவசாயிகளின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.”

***

ANU/AP/RB/DL