Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரண் பலியனுக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியின் குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரண் பலியனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஜொலிக்கிறார்கள்.

குண்டு எறிதல் போட்டியில் அற்புதமான சாதனை படைத்து வெண்கலப் பதக்கம் வென்ற சிறந்த வீராங்கனை கிரண் பலியனுக்கு பெரிய வாழ்த்துகள். அவரது வெற்றி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.”

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

***

ANU/AP/PLM/DL