Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டிருந்ததாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய குழுவை அனுப்புவதன் மூலம் விளையாட்டு மீதான இந்தியாவின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் பிரகாசிக்கிறது. நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி, உண்மையான விளையாட்டு உணர்வு என்ன என்பதை செயலில் நிரூபிக்கட்டும்.”

(Release ID: 1960029)