Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களவையில் நாரி சக்தி வந்தன் அதினியம் குறித்து பிரதமர் கூறிய கருத்துகளின் தமிழாக்கம்


மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா மீது கடந்த 2 நாட்களாக விரிவான விவாதம் நடைபெற்று வருகிறது. இரு அவைகளிலிருந்தும் சுமார் 132 மாண்புமிகு உறுப்பினர்கள் மிகவும் அர்த்தமுள்ள விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவாதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நமது முன்னோக்கிய பயணத்தில் நம் அனைவருக்கும் பயனளிக்கும். அதனால்தான் இந்த வியத்தின் ஒவ்வொரு அம்சமும் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் உரையின் தொடக்கத்தில், இந்த மசோதாவை ஆதரிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர், அதற்காக, மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எழுந்துள்ள உத்வேகம் நமது நாட்டு மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மேலும் அனைத்து உறுப்பினர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன. இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பது மட்டுமல்ல; அதையும் தாண்டி செல்கிறது. இந்த மசோதா குறித்து நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பது நமது நாட்டின் மகளிர் சக்திக்கு ஒரு புதிய ஆற்றலைக் கொடுக்கும். அது தலைமைத்துவத்துடன் முன்வந்து புதிய நம்பிக்கையுடன் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கும். அதுவே நமது ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதமாக இருக்கும்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

நான் இந்த அவையில் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நீங்கள் வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு மட்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பு என்று வரும்போது, இது மேலவையாகும். எனவே, ஒரு நல்ல விவாதத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மசோதா மீது ஒருமனதாக வாக்களிப்பதன் மூலம் நாட்டிற்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்குகிறோம் என்று நான் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எதிர்பார்ப்புடன், எனது இதயத்தின் அடிமதிலிருந்து அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன்.

பொறுப்பு துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை  இந்தியில் வழங்கியிருந்தார்.

***

ANU/AD/PLM/KV