மதிப்பிற்குரிய குடியரசு துணைத்தலைவர் அவர்களே! மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே! மதிப்பிற்குரிய மூத்த பிரமுகர்கள் மற்றும் 1.4 பில்லியன் குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்பிற்குரிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே!
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு உங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ஒரு புதிய பயணத்தை நாம் கூட்டாக தொடங்குகிறோம். இன்று, நாம் வளர்ந்த இந்தியாவுக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். மாண்புமிகு உறுப்பினர்களே, இந்தக் கட்டிடம், குறிப்பாக இந்த மைய மண்டபம், நமது உணர்வுகளால் நிரம்பியுள்ளது. இது ஆழமான உணர்வுகளைத் தூண்டுகிறது மற்றும் நம் கடமைகளிலும் நம்மை ஊக்குவிக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு, இந்தப் பிரிவு ஒரு வகையான நூலகமாக செயல்பட்டது, ஆனால் பின்னர், இது அரசியலமைப்பு சபை கூட்டங்களுக்கான இடமாக மாறியது. இந்தக் கூட்டங்களில்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் மிக நுணுக்கமாக விவாதிக்கப்பட்டு வடிவம் பெற்றது. இங்குதான் ஆங்கிலேய அரசு, பாரதத்திற்கு அதிகாரத்தை மாற்றியது. இந்த மைய மண்டபத்தில்தான் இந்திய மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டு, நமது தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகும் பல வரலாற்று சந்தர்ப்பங்களில், இரு அவைகளும் இந்த மைய மண்டபத்தில் கூடி விவாதித்து, ஒருமித்தக் கருத்தை எட்டி, பாரதத்தின் தலைவிதியை வடிவமைப்பது குறித்து முடிவுகளை எடுத்துள்ளன.
1952 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 41 அரசுத் தலைவர்கள் இந்த மைய மண்டபத்தில் நமது மாண்புமிகு உறுப்பினர்களிடையே உரையாற்றியுள்ளனர். நமது குடியரசுத்தலைவர்கள் இந்த மண்டபத்தில் 86 முறை உரையாற்றியுள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களில், இந்த பொறுப்புகளைக் கையாண்டவர்கள் பல சட்டங்கள், பல திருத்தங்கள் மற்றும் பல மேம்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர். மக்களவையும், மாநிலங்களவையும் இணைந்து இதுவரை 4,000 சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. வரதட்சணைக்கு எதிரான சட்டமாக இருந்தாலும் சரி, வங்கி சேவை ஆணைய மசோதாவாக இருந்தாலும் சரி, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் சட்டமாக இருந்தாலும் சரி, அது தேவை என்று தெரிந்தபோது, கூட்டுக் கூட்டத் தொடரின் மூலம் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான உத்திகள் கூட செய்யப்பட்டன. இவை அனைத்தும் இதே அவையில் நடந்த கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதே நாடாளுமன்றத்தில், நமது இஸ்லாமிய சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு, ஷா பானு வழக்கு காரணமாக நிலைமை ஒரு சிக்கலான கட்டத்தை எட்டியபோது, இந்த சபை அந்த தவறுகளை சரிசெய்து முத்தலாக்கிற்கு எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. கடந்த சில ஆண்டுகளாக, திருநங்கைகளுக்கு நீதி வழங்க நாடாளுமன்றமும் சட்டங்களை இயற்றியுள்ளது. அவர்கள் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பிற வசதிகளை கண்ணியத்துடன் பெறுவதை உறுதி செய்வதற்கான திசையில் பணியாற்றி வருகிறோம். நமது மாற்றுத் திறனாளி குடிமக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் சட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். 370-வது பிரிவை நீக்குவது குறித்து, இந்த அவைக்கு உள்ளேயும் வெளியேயும் விவாதம், கவலை, கோரிக்கை மற்றும் கோபத்தை வெளிப்படுத்தாத ஒரு தசாப்தம் இருந்திருக்காது. ஆனால் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையான 370 வது பிரிவிலிருந்து இந்த அவையில் நாங்கள் சுதந்திரம் பெற்றதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த முக்கியமான முயற்சியில், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு முக்கியமானது.
இன்று, ஜம்மு-காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் உறுதிபூண்டுள்ளது, மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் புதிய உற்சாகம் மற்றும் புதிய உறுதியுடன் நிரம்பி வழிகிறார்கள், மேலும் முன்னேறுவதற்கான எந்த வாய்ப்பையும் இழக்க விரும்பவில்லை. நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எவ்வளவு முக்கியமான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது. மாண்புமிகு உறுப்பினர்களே, நான் செங்கோட்டையில் இருந்து கூறியது போல, இது சரியான நேரம். ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், இன்று பாரதம் ஒரு புதிய பிரக்ஞையுடன் விழித்தெழுந்திருக்கிறது என்பதற்கு ஒவ்வொரு நிகழ்வும் சாட்சியாக இருக்கிறது. பாரதம் புதிய ஆற்றலால் நிரம்பியுள்ளது, இந்த உணர்வு, இந்த ஆற்றல், இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை தீர்மானங்களாக மாற்றி, கடின உழைப்பின் மூலம் அந்த தீர்மானங்களை அடைய முடியும். இது நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. நாடு எந்த திசையில் செல்கிறதோ அந்த திசையில் நிச்சயம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் எவ்வளவு வேகமாக நகர்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் பலன் கிடைக்கும்.
இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. ஆனால் முதல் மூன்று பொருளாதாரங்களை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறி வருகிறது. பாரதத்தின் வங்கித் துறை அதன் வலிமை காரணமாக உலகில் மீண்டும் நேர்மறையான விவாதங்களின் மையத்தில் உள்ளது. பாரதத்தின் நிர்வாக மாதிரி, யு.பி.ஐ (ஒருங்கிணைந்த கட்டண இடையீடு) மற்றும் டிஜிட்டல் பங்குகள் உலகளவில் பாராட்டப்படுகின்றன. ஜி20 உச்சிமாநாட்டில் நான் இதைக் கவனித்தேன், பாலியிலும் பார்த்தேன். தொழில்நுட்ப உலகில் பாரதத்தின் இளைஞர்கள் முன்னேறி வரும் விதம் ஆர்வத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் ஈர்க்கும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் விஷயமாகும். அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். லட்சிய சமூகங்கள் கனவுகளை வளர்க்கும்போது, தீர்மானங்களை அமைக்கும்போது, புதிய சட்டங்களை உருவாக்குவதன் மூலமும், காலாவதியான சட்டங்களை அகற்றுவதன் மூலமும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நம் அனைவருக்கும் ஒரு சிறப்பு கடமை உள்ளது. நாடாளுமன்றத்தில் நாம் உருவாக்கும் ஒவ்வொரு சட்டமும், நாடாளுமன்றத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு விவாதமும், நாடாளுமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு சமிக்ஞையும் இந்திய லட்சியங்களை உயர்த்துவதாக இருக்க வேண்டும். இதுதான் நமது உணர்வு, கடமை, ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பு. நாம் மேற்கொள்ளும் எந்த சீர்திருத்தங்களிலும் இந்திய விருப்பங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையுடன் இருக்க வேண்டும். நமக்கு 75 வருட அனுபவம் உள்ளது. நம் முன்னோர்கள் வகுத்த பாதைகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டோம். நமக்கு வளமான பாரம்பரியம் உள்ளது. இந்த பாரம்பரியத்துடன், நம் கனவுகள் நமது உறுதியுடன் இணைந்தால், நமது சிந்தனையின் எல்லை விரிவடைந்தால், நாமும் பாரதத்தின் கம்பீரமான உருவத்தை சித்தரித்து, அதன் வரைபடத்தை வரைந்து, வண்ணங்களால் நிரப்பி, வரும் தலைமுறையினருக்கு பாரதத் தாயின் தெய்வீகத்தை வழங்க முடியும், நண்பர்களே.
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே,
இன்று உலகின் கவனம் பாரதத்தின் மீதே உள்ளது. பனிப்போர் காலத்தில் நமது அடையாளம் அணிசேரா நாடாக இருந்தது. அந்தக் காலத்திலிருந்து நாம் வெகுதூரம் வந்திருக்கிறோம், தேவைகளும் நன்மைகளும் பரிணமித்துள்ளன. இன்று உலகில் பாரதம் வேறுபட்ட நிலையைக் கொண்டுள்ளது. அப்போது அணிசேராமையின் தேவை இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் ஒரு கொள்கையை பின்பற்றுகிறோம், இந்த கொள்கையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக, நாம் ஒரு ‘விஸ்வாமித்ரா’ (உலகளாவிய நண்பராக) முன்னேறி வருகிறோம். நாம் உலகத்துடன் நட்புறவை வளர்த்து வருகிறோம். பாரதத்துடன் நட்புறவை உலகம் தேடுகிறது. பாரதம் உலகிலிருந்து வெகு தொலைவில் இல்லை, ஆனால் அதற்கு நெருக்கமாக நகர்கிறது என்று தோன்றுகிறது. இந்தியா உலகிற்கு ஒரு நிலையான விநியோக சங்கிலியாக உருவாகி வருகிறது, இது காலத்தின் தேவை. ஜி20 மாநாட்டில் உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா மாறி வருகிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஜி20 மாநாட்டில் விதைக்கப்பட்ட இந்த விதை, இனி வரும் காலங்களில், அத்தகைய ஆலமரமாக, நம்பிக்கையின் ஆலமரமாக மாறப்போகிறது, அதன் நிழலில் வரும் தலைமுறையினர் பல நூற்றாண்டுகளுக்கு பெருமையுடன் அமரப் போகிறார்கள். இதை நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜி20 இல் நாம் ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியை மேற்கொண்டுள்ளோம், அது உயிரி எரிபொருள் கூட்டணி. நாம் உலகை வழிநடத்துகிறோம், வழிகாட்டுகிறோம். உலகின் அனைத்து நட்பு நாடுகளும் உயிரி எரிபொருள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன, ஒரு பெரிய இயக்கம் உருவாக்கப்பட உள்ளது, அது நமது பாரதத்தால் வழிநடத்தப்படுகிறது. சிறிய கண்டங்களுடன் பொருளாதார வழித்தடங்களை உருவாக்க வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
மதிப்பிற்குரிய நண்பர்களே, குடியரசு துணைத் தலைவர் அவர்களே, சபாநாயகர் அவர்களே,
இன்று இங்கிருந்து விடைபெற்று நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு செல்கிறோம். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நடப்பதால், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், நாங்கள் அமர உள்ளோம். இருப்பினும், உங்கள் இருவருக்கும் நான் ஒரு கோரிக்கையும் ஆலோசனையும் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் சேர்ந்து அந்த யோசனையை சிந்தித்து சில முடிவுகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போது நாம் புதிய அவைக்கு நகர்வதால், அதன் கண்ணியம் ஒருபோதும் குறையக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். அதை நாம் ஒருபோதும் ‘பழைய நாடாளுமன்றம்’ என்று குறிப்பிட்டு விட்டு விடக்கூடாது. எனவே, எதிர்காலத்தில், நீங்கள் இருவரும் சம்மதித்தால், அதை ‘சம்விதான் சதன்’ என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வழியில், அது எப்போதும் நம் வாழ்க்கையில் ஒரு உத்வேகமாக இருக்கும். இதை ‘சம்விதான் சதன்’ என்று நாம் அழைக்கும்போது, ஒரு காலத்தில் அரசியல் நிர்ணய சபையில் அமர்ந்திருந்த அந்த மாமனிதர்களின் நினைவுகளும் அதனுடன் இணைக்கப்படும். எனவே, எதிர்கால சந்ததியினருக்கு இந்த பரிசை வழங்குவதற்கான வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது.
இந்த புனித பூமிக்கு மீண்டும் ஒரு முறை எனது மரியாதையை சமர்ப்பிக்கிறேன். புதிய அவைக்காக உங்கள் அனைவரையும் வாழ்த்துவதோடு எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
மிக்க நன்றி
***
Addressing a programme in the Central Hall of Parliament. https://t.co/X1O1MBiOsG
— Narendra Modi (@narendramodi) September 19, 2023
Central Hall of Parliament inspires us to fulfill our duties. pic.twitter.com/ZUWhOJNCmn
— PMO India (@PMOIndia) September 19, 2023
India is full of new energy. We are growing rapidly. pic.twitter.com/FGK7iVOYaU
— PMO India (@PMOIndia) September 19, 2023
We have to build an Aatmanirbhar Bharat in Amrit Kaal. pic.twitter.com/YyaBgtZWD6
— PMO India (@PMOIndia) September 19, 2023
We have to carry out reforms keeping in mind the aspirations of every Indian. pic.twitter.com/Oj2LuPyt8N
— PMO India (@PMOIndia) September 19, 2023
During G20 we have become the voice of the Global South. pic.twitter.com/TgLf7qPq7y
— PMO India (@PMOIndia) September 19, 2023
अमृतकाल के 25 वर्षों में भारत को बड़े कैनवास पर काम करना ही होगा। pic.twitter.com/6eaFheE8JQ
— PMO India (@PMOIndia) September 19, 2023
समय की मांग है कि हमें आत्मनिर्भर भारत के संकल्प को पूरा करना है। pic.twitter.com/66A7Qa4IYh
— PMO India (@PMOIndia) September 19, 2023
आज Indian Aspirations ऊंचाई पर हैं। pic.twitter.com/LY3RbXZDh3
— PMO India (@PMOIndia) September 19, 2023
सामाजिक न्याय, ये हमारी पहली शर्त है। बिना सामाजिक न्याय हम इच्छित परिणामों को हासिल नहीं कर सकते। pic.twitter.com/mOWIiFMYaA
— PMO India (@PMOIndia) September 19, 2023
हमें सर्वांगीण विकास के पक्ष में सामाजिक न्याय को प्राप्त करने की दिशा में आगे बढ़ना है। pic.twitter.com/pbw8R06YHE
— PMO India (@PMOIndia) September 19, 2023