Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை


ஆச்சார்யா வினோபா பாவேயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சமூக சீர்திருத்தம் மற்றும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது தன்னலமற்ற தன்மை மற்றும் ஒற்றுமையின் பாரம்பரியம் வரும் நூற்றாண்டுகளுக்கு மனித சமுதாயத்தை வழிநடத்தட்டும்.

—-

ANU/AD/IR/KPG/GK