Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் சந்திப்பு

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09.2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் திரு சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திரு உர்சுலா வான் டெர் லெயன் ஆகியோரை சந்தித்தார்.

 

இந்தியாவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் வெற்றிக்காக இருவரும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

அடுத்து நடைபெறவுள்ள இந்தியா – ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாடு, தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள், பருவநிலை மாற்றம், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (டி.டி.சி) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே உள்ள ஒத்தழைப்பு குறித்து அப்போது அவர்கள் விவாதித்தனர்.

 

09-09- 2023 அன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த வழித்தடத்தை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த வழித்தடத்தின் கீழ் சூரிய சக்தித் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

 

 

***

ANU/SM/PLM/DL