Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மனி சான்சிலருடன் பிரதமர் சந்திப்பு

ஜெர்மனி சான்சிலருடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.09.2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் சான்சிலர் (பிரதமர்) திரு ஓலாஃப் ஷோல்-ஸை சந்தித்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பின்னர், இந்த ஆண்டில் அந்நாட்டுப் பிரதமர் மேற்கள்ளும் இரண்டாவது இந்தியப் பயணம் இதுவாகும்.

இந்தியாவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் வெற்றிக்காக ஜெர்மனி பிரதமர் திரு ஷோல்ஸ் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு ஜி 20 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்துக்கு  ஜெர்மனி வழங்கிய ஆதரவை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, முக்கிய கனிமங்கள், திறன் வாய்ந்த மனித வளம், கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்காக மீண்டும் இந்தியா வருமாறு ஜெர்மனி பிரதமர் திரு ஷோல்ஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

***

ANU/SM/PLM/DL