Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதற்குப்  பாராட்டு தெரிவித்ததோடு, ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக ஜி 20 உறுப்பு நாடுகளுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.

 

புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தின் டிஜிட்டல் நகலைப் பகிர்ந்து சமூக ஊடக  எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்து மற்றும் உணர்வில் ஒன்றிணைந்து, ஒரு சிறந்த, வளமான மற்றும் இணக்கமான எதிர்காலத்திற்குக்  கூட்டாகப் பணியாற்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக  ஜி 20 உறுப்பு நாடுகளுக்கு எனது நன்றி.”

******

(Release ID: 1955838)

ANU/SM/SMB/KRS