Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆகஸ்ட் 2023-ல் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 10 பில்லியனை கடந்திருப்பதற்கு பிரதமர் பாராட்டு


2023 ஆகஸ்ட் மாதத்தில் யூபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 10 பில்லியனைக் கடந்திருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகமான என்.பி.சி.ஐ.யின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

இது மிகச்சிறப்பான செய்தி! இந்திய மக்கள் டிஜிட்டல் முன்னேற்றங்களை ஏற்று செயல்படுவதற்கு சான்றாகவும், அவர்களின் திறன்களுக்கான மரியாதையாகவும் இது அமைந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இதே நிலை தொடரட்டும்.

***

ANU/AD/PLM/AG/KPG